Rali – Jun 27, 2016

ராலி க. நி. தெக்காலம்  #274

கறைசேரும் கலியுகத்தில்

    மறையா மறையையும்

பிறைசூடும் பித்தனையும்

    பத்தவதாரப் பையனையும்

குறையிலா ஆயிரம் பேர்

    சொல்லிப் பாட யமுனைத்

துறைவனை ராலி தவறாது

    துதிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #275

ஈராறு கையான் வளர்

    நல்தமிழ் பயின்று

ஊரார் செயல் நினையாது

    மெய் பணிந்து

ஓராயிரம் பேர் சொல்லி

    பேரருள் தரும்

ஆராவமுதனை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #276

நரியைப் பரியாக்கி ஆட்

    கொண்ட அண்ணலையும்

கரியவான் நிறம் கொண்ட

    கள்ளன் கண்ணனையும்

விரிகடலோர குமரனையும்

    நினையாதிருந்தும் காக்கும்

அரியுருவானவனை ராலி

    அர்ச்சிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s