ராலி க. நி. தெக்காலம் #295
தோள் தந்து சிறுவயதில்
காயத்ரி மந்திரம் தந்தோர்
ஆள் ஆக்கிய அன்புத்
தந்தையின் மேலாய் உயர்
கேள்விப் பொருள் சொல்
வோரைத் தேட வேதமும்
வேள்வியு மாயினானை ராலி
வேண்டுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #296
வாங்கி வந்த வரமனைத்தும்
சற்றும் விடாது
தாங்கி அதன் நடுவே பிறவிப்
பயன் தேடும்
பாங்கினை நாடும் நல்லறிவு
வேண்டி ராலி
ஈங்கோய் மலையானை
மன்றாடுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #297
அங்கங்கே அயல்நாட்டில்
எண்ணிலா திங்கள்
எங்கெங்கோ வாழவைத்துப்
பின் நான்மறை
தங்கும் தாயகம் வந்துய்ய
வைத்த சடையில்
கங்கை வைத்தானை ராலி
வாழ்த்துவ தெக்காலம்?
Advertisements