Rali – Jul 04, 2016

ராலி க. நி. தெக்காலம்  #289

மாண்டு மாண்டு மீண்டும்

    வந்து வாடாது

ஈண்டு இருக்கையிலேயே

    ஆழ்சம்சார நதி

தாண்டும் வழி தேடவைத்த

    நீண்ட மாலஞ்ச

நீண்ட ஜோதியை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #290

வருத்தம் தரும் வாழ்க்கையில்

    வாடி உழலாது

திருத்தம் தரும் மேலோர்

    உறவையே விரும்பி

இருத்தலே பயனென்று

    காட்டும் நிருத்தமாடும்

ஒருத்தனை ஒருமையுடன்

    ராலி ஓதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #291

நங்கையிலும் மண்ணிலும்

    பொன்னிலும் மனம்

தங்கையில் பெறாத இன்பம்

    ஆழ்பக்தியில் மனம்

பொங்கையில் ஊறுமென

    உணர உத்தரகோச

மங்கைக்கரசனை ராலி

    மெச்சுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s