SKC – Jun 27, 2016

படுக்கவும் மெத்தையுண்டு

பார்க்க தொலைக்காட்சி உண்டு

நடுக்கும் குளிர்ப் பெட்டிஏ உண்டு

நல்ல நாற்காலி உண்டு

எடுக்க தொலைபேசி உண்டு

இன்ன பிற சுகமும் உண்டு விரல்

சொடுக்க வேலையாள் உண்டு

சுழலும் மின்விசிறி உண்டு பிறர்க்கு

இடுக்கண் வருங்காலை

இன்னதென அறியாமல்

தடுக்கும் மனமின்றி

தான் ஒதுங்கிப் போவது உண்டு வரி

கொடுக்கும் வருமானம் உண்டு வறுமைக்

கோட்டின் மேல் இருத்தல் உண்டு எனில்

ஒடுக்கும் விலைவாசி கண்டு

உடல் வியர்த்துப் போவது உண்டு

அடுக்கடுக்காய் இங்கு

அத்தனையும் கண்டு பின்னும்

நடக்காத நன்னாளை

நாளும் எதிர்பார்த்து

மிடுக்காய் அலைந்திங்கு

மெழுகாய்த் தேய்வதுண்டு இன்னும்

நட காத தூரமென்று

நடுத்தர ஏழை எம்மை

எடுப்பார் கைப்பிள்ளை என

எல்லோரும் நகையாட இவர்

துடுக்கை அடக்கி

துணை நின்று எம் துயர்

துடைக்கும் திருமாலைத்

தொழுதலும் இலனே!

 

 

கருவில் மகவாய்க்

கனியும் உயிரை

எருதில் விரையும்

எமனின் கயிறும்

உருவும் பொழுதே

உறையும் உணர்வும்

மருகும் மனதும்

மாலவன் மருகன்

அருளை எண்ணி

அவன் கழல் தொழுமே!

மேகம் அழுது

மழையாய் வீழ

தாகம் மிகுந்து

தன்னை இழந்து

வேகம் கொண்டு

வீணாய்த் தவித்து

மோகம் தீர்த்து

முத்தாய் வியர்த்து

தேகம் குளிர்ந்து

தினவும் அடங்கி

சோகம் மனதை

சுமையாய் சூழ

சாகும் இவ்வாழ்வை

சலித்தலும் இலனே!

Rali: @SKC – reply to your piece #1:

துடுக்காய்ப் இருப்போரைத்

    துச்சமாய் மதித்து வெகு

மிடுக்காய் நடக்கும் ஆனை

    அரசனாய் நடப்போம் அவரைக்

கடுக்காமல் இருந்து மறந்து

    நம் வழி உயர்வழியென

எடுக்காதெடுத்த இம்மனிதப்

    பிறவியில் உயர்வோம்

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s