ராலி க. நி. தெக்காலம் #251
மண்ணில் பிறந்த பயன்
உளமுருகி பக்தி
பண்ணி மனம் கழுவி மீண்டும்
மீண்டும் வரும்
எண்ணிலா பிறவி குறைக்க
வேயென வாளார்
கண்ணி பங்கனை ராலி
எண்ணுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #252
அண்டம் தினம் கண்டும்
அதன் மூலம் ஆராயாது
பிண்டம் போல் வாழ்ந்தாலும்
ஏதேனும் ஒரு சிறு
துண்டம் பக்தி கொண்டாலும்
பிறவிப் பயனென
கண்டம் கறுத்தானை ராலி
அண்டுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #253
கீர்த்தி வேண்டேன் ஊரும்
உறவும் பலரும்
பார்த்துப் போற்றும்
பொருள் வேண்டேன்
ஈர்த்து எனைக் கொள்
மூவாயிர வர்க்கும்
மூர்த்தி நீயென ராலி
கேட்ப தெக்காலம்?
Advertisements