Rali – Jun 03, 2016

ராலி க. நி. தெக்காலம்  #240

மாடு போல் மதியின்றி

    வாழாது உண்மை

தேடுவதே வாழ்வின்

    நோக்கமென தினம்

பாடும் நல்லுறவு சேர்க்கும்

    வெகுவாய் ராலி

ஆடுசடை அண்ணலை

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #241

காசுபணம் அழியும்

    வளர்க்கும் இவ்வுடல்

மாசுபடிந்து சாகும்

    மெய்தேடலே பணியென

பேசும் நல்லோருறவு

    தேடும் தாகம் தரும்

பூசுபொடித் தலைவனை

    ராலி பூசிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #242

மரம்போல் முன்நின்று

    சற்றும் உணர்வின்றி

கரம்கூப்பிக் கருத்தை

    வேறிடம் வைத்தும்

வரம் தந்து நல்லோர்

    உறவுதந்து காக்கும்

நிரம்பா மதியானை ராலி

    நினைப்ப தெக்காலம்?

 

BKR:

” நிரம்பா மதியான்”.

ராலி, உன் தமிழ் உன்னதம்

 

Rali: @BKR

உன்னத மென்றாய்‌ அது

என்னது அன்று நால்வர்

சொன்னது.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s