Rali – Jun 02, 2016

ராலி க. நி. தெக்காலம்  #237

வரும்முன் துன்பம்

    துடைத்துப் பெரும்பழி

சேரும்முன் நல்வழி

    காட்டிக் குறையுமாயுள்

தீரும்முன் நற்கதி

    பெற நாட்டம் கூட்டிய

கருமுகில் வண்ணனை

    ராலி கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #238

நஞ்சு கொண்ட மனத்தினர்

    சூழ்ந்திருந்தும்

அஞ்சுதல் இல்லையெனும்

    அயரா திடநெஞ்சு

கெஞ்சுதல் இல்லாமலே தந்து

    வந்து காக்கும்

துஞ்சிருள் ஆடுவானை ராலி

    துதிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #239

நவநவமாய் வித்தை

    காட்டும் இவ்வுலகில்

எவரேனும் வழிகாட்ட

    உள்ளொரு தாகம் தந்து

தவமுடையோர் உறவு

    தந்து காத்திடும் அவள்

இவள் நல்லூரானை

    ராலி நாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s