Rali – Jun 01, 2016

ராலி க. நி. தெக்காலம்  #234

இற்றைக்கும் இனிவரும்

    பிறவிக்கும் வழிகாட்டி

மற்றையது வழிக்குதவா

    தெனநன் குணர்த்தி

பற்றைவிடென படித்துச்

    சொல்லிக் காக்கும்

ஒற்றை விடையானை

    ராலி சாற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #235

மோகம் கொன்று

    நல்விவேகம் கொண்டு

சோகம் தீர்க்கும்

    நல்லோருறவு பெறவே

தாகம் தந்து நற்கதிக்கு

    உயர்வழி காட்டும்

ராகவ ராமனை ராலி

    அறிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #236

இன்னும் இன்னும் என

     ஐம்புலன் தீனி பொழுதும்

தின்னும் அடங்கா ஆசை

     வளர்த்துக் காரிருள்

என்னும் நரகு சேர்க்கும்

     வாழ்க்கை வாழாது ராலி

மன்னு மதுரை மைந்தனை

     நினைப்ப தெக்காலம்?

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s