Rali – May 29, 2016

ராலி க. நி. தெக்காலம்  #225

தானம் தர்மம் அறம்

    சிறிதும் செய்யாது தினம்

கானம் காட்சி காலை

    மாலை உண்டு மதி மயக்கும்

பானம் தூக்கம் எனக்

    கழித்திராது ராலி மூன்றடி

தானம் கேட்ட முகுந்தனை

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #226

அழுத்து அழுத்து என அதர்ம

    வழியில் பொருளீட்டி

கழுத்து தெரியாது உடல் பருத்து

    விரைவாய் முடிவை

இழுத்து அரிய பிறவியை வீணே

    முடித்திராது ஐந்து

எழுத்து ஐயன் அடியை ராலி

    வழுத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #227

கண்டதைத் தின்றும் பார்த்தும்

     கேட்டும் தினம்

உண்டதும் உறங்கி மீண்டும்

     உண்டு முறங்கியும்

கொண்டதே கோலமென

     வாழாது வெண்ணெய்

உண்ட வாயனை ராலி

     வேண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s