Rali – May 25, 2016

ராலி க. நி. தெக்காலம்  #216

வாழ நல்வழி பழக்கும்

     வேதசாத்திரம் துறந்து

ஆழம் அறியா ஆசைக்

     கிணறு ஆழந்து தோண்டிக்

கீழத் தள்ளும் கீழோர் உறவு

     அறவே துறந்து ராலி

வேழம் உரித்த வேந்தனடி

      வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #217

ஊர் பல தேசம் பல என

     செல்வம் ஓடித் தேடி

ஆர் எவர் எனக் கருதாது

     கீழோருட னுறவாடி

பேர் கெட்டு மதி கெட்டுப்

     பொருளீட்டி வாழாது

சீர்காழி சட்ட நாதனை

     ராலி சிந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #218

இளித்துப் புல்லரை மகிழ்வித்துச்

    செல்வம் திரட்டிக்

களித்துக் காலம் கழித்து கேடான

    அற்ப சுகங்களில்

துளியும் புண்ணியம் சேர்க்கா

    மதிமூடரை விட்டு ராலி

ஒளியாய் ஒளிரும் களிறை

    வழுத்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s