Rali – May 23, 2016

ராலி க. நி. தெக்காலம்  #210

எதைத் தின்றாயினும் உடல்

    வளர்த்து வெறும்

சதை வளர்த்து நற்சொல்

    நீதிதரும் புராணக்

கதையும் கேளாத புல்லர்

    போலன்றி கூற்றஞ்ச

உதைத்த உமாபதியை

    ராலி உணர்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #211

வாள் போலறுக்கும் கொடுஞ்

    செயலும் பெருங்கருந்

தேள் போல் கொட்டும் கொடுஞ்

    சொல்லும் இறைமுன்

தோள் படத் தரையில் வீழாத

    மாந்தர் போலன்றி

நீள்நிலா அணிவானை ராலி

    நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #212

வருங்காலம் எண்ணிப் பல்நிதி

    சேர்த்துப் பல்காலம்

மருந்துண்டாயினும் பாழும் உடல்

    காத்துக் கிட்டியது

அரும்பிறவியென மறந்து வாழ்வார்

    போலன்றி திருப்

பெருந்துறை உறையானருள் ராலி

    பெறுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s