Rali – May 15, 2016

ராலி க. நி. தெக்காலம்  #189

வம்பு வளர்க்கும் மாத வார

     நாள் வலை இதழ்களும்

நம்புவதா இல்லையா எனும்

     இணைய சேதி தரும்

ஐம்புலக் கிளர்ச்சியில் மாய்ந்து

     தோய்ந்திராமல் ராலி

அம்பெய்து பத்துத் தலை அரிந்

     தானை அணுகுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #190

ஏய்த்துப் பொன் பொருள்

    சேர்த்துப் பாவத்தில்

தோய்த்து உள்ளம் கறுத்துப்

    புரியும் பாவம்

காய்த்துப் பழுத்து நரகில் தள்ளும்

    முன்னே ராலி

பேய்ச்சிமுலை உண்டானை

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #191

கேளிக்கை கூத்தில் கால

    மெல்லாம் கழித்து மச்சு

மாளிகையில் அறம் அறவே

    துறந்து நான்கு பேர்

தோளில் காடு சேர் நாள்

    மறந்தார் போலிராது ராலி

காளியனை மிதித்தானைக்

    கருதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s