Rali – May 07, 2016

ராலி க. நி. தெக்காலம்  #171

வாங்கி விற்றுப் பங்குச்

    சந்தையில் தினம் தினம்

ஏங்கி அடங்கா ஆசையில்

    தோய்ந்து மாய்ந்து

தாங்கிக் காக்கு மறம் மறந்து

    சாவார் போலிராது

ஓங்கி உலகளந்தானை ராலி

    வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #172

போதை தரும் அற்ப

    சுகத்தில் தோய்ந்து

தீதை விரும்பிப் பார்த்தும்

    கேட்டும் நல்

பாதை விலகி பதராய்ச்

    சாவார் போலிராது

சீதை மன்னனை ராலி

    சிந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #173

தான் எனும் திமிரும்

    அறச் செயல் செய்தல்

ஏன் எனும் குணமும்

    வெறுத்து ஒதுக்குதல்

மேன் மக்கள் என்றும்

    வாழ்வார் போலிராது

நான்முகன் அப்பனை

    ராலி நண்ணுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s