BKR – Rali Exchanges – Aug 2016

BKR:

வெண்பா இயற்ற வழிகேட்கும் என்னருமை

நண்பா உனக்கெனது வாழ்த்துக்கள்-வெண்பா

சுகமாய்நாம் பன்னூறு சாற்றிடினும் சங்கப்

புகழேந்தி யாவோமோ  சொல்.

 

Rali:

வெண்பா எழுதுவேன் நன்றாய் எழுதுவேன்

நண்பாநீ சொல்லித் தரின்.

 

ஒன்றானது ஓரிடமில் லாதெங்கும்  மேவிடும்

இன்றானது அன்பாம் உணர்.

 

அறுபதாய் இன்னும் எழுபதாய் ஆயினும்

ஆசை அழியாத தேன்?

 

BKR:

ஒன்றான தோரிடமெல் லாதெங்கும் மேவிடும்

இன்றான தன்பாம் உணர்.

(சரி செய்த சீர்களுடன்)

 

Rali:

அறுபதாய் இன்னும் எழுபதாய் ஆயின்

பொறுப்பு வகித்தல் தவிர்.

 

அறுபதாய் இன்னும் எழுபதாய் ஆனால்

வறுத்துப் புசித்தல் தவிர்.

 

BKR:

அறுபதைத் தாண்டி எழுபதைக் கண்டும்

அறுபடாது ஆசைத் தளை.😊

 

Rali:

யாரும் அறியாது இங்குப் பிறந்திடினும்

பேரும் புகழும் பெறும்வகை ஐயனைச்

சேரும் வழியே உணர்.

 

BKR:

வத்தல் குழம்பிருக்க வேறுண்ணல் கைநிறைய

சொத்திருக்கப் பிச்சையெடுத் தற்று.

 

சாம்பார் ஒருமுறை உண்டவர்க்கு வானமுதம்

வேம்பாய்க் கசக்கும் உணர்

 

Rali:

வள்ளுவன் கம்பன் அருணகிரி போனபின்

பள்ளியற்ற நம்பீகே யார்

 

வேர்த்து விறுவிறுத்து மெய்வருத்திச் சொல்சொல்லாய்

சேர்த்துத் தருவதில்லை பண்.

 

கோயில் நிறைந்துத் தெருவெங்கும் ஆவினம்

மேயுமுர் நங்கநல் லூர்.

 

சற்றே புளித்திடும் இட்லியும் சட்னியும்

மற்றும் மசால்தோசை யும்சாம்பா ருமதில்

சுற்றி உருக்கிய நெய்யும் தினம்தினம்

பெற்றால் தனிச்சுகம் தான்.

 

மாமியார் மாட்டுப்பெண் சண்டை படைக்கிற

சாமியே தீர்த்தல் அரிது.

 

BKR:

மாமியார் மாட்டுப்பெண் போன்றல்ல நல்லதுவே

மாமனார்மாப் பிள்ளை  உறவு😊

 

 

சண்டையே போடாத மாட்டுப்பெண் மாமிகளும்

உண்டிங் குலகில் உணர்😊

 

என்மனையென் அன்னையிடம் இட்டதில்லை சச்சரவு

உன்துணையும் வாழ்ந்திருப்பார் அங்ஙனமே – என்பதனால்

யாரோ விடுத்தகதை உண்மையதில் இல்லையென

ஊருக் கெடுத்துரைப்போம் நாம்😊😊

 

மாமி மருமகள்போர்  நேரலாம் மாறாது

மாமன்மாப் பிள்ளை உறவு😊👍

 

Rali:

தீரமாய் வேகமாய் பூனைதுரத் துமெலி

வீரமாய்ப் பாம்பிடம் சீறிடும் கீரியும்

தாரமாம் மாட்டுப்பெண் மாமியும் மோதிடும்

காரணம் என்றும் இயல்பு.

 

காலிருத்தல் கோயிலில் சுற்றவே என்பதை

ராலி உணர்தல் நலம்.

 

கங்கை யமுனை சரஸ்வதி நர்மதை

காவேரி சிந்துகோ தாவரி என்பதாம்

ஏழாறில் நீராடல் நன்று.

 

சுறுசுறுப்பாய் ஓய்விலாது வேலைசெய் யாது

அறுபதில் ஓய்தல் நலம்.

 

சுறுசுறுப்பாய் ஓய்விலாது வேலைசெல் லாது

மறுபிறப்பில் நல்வாழ் வமைய முயல

அறுபதில் ஓய்தல் நலம்.

 

சுறுசுறுப்பாய் ஓய்விலாது செல்வம்சேர்க் காது

மறுபிறப்பில் நல்வாழ் வமைய முயல

அறுபதில் ஓய்தல் நலம்.

 

BKR:

ஓயா தொருவனை உன்னுவோம் ஓய்ந்தபின்

உன்னலாம் என்ப திழுக்கு.

 

Rali:

சுறுசுறுப்பாய் ஓய்விலாது செல்வம்சேர்க் காது

வெறுத்துவா னப்ரஸ்தம் மேற்கொள வேண்டி

அறுபதில் ஓய்தல் நலம்.

 

சுறுசுறுப்பாய் ஓய்விலாது செல்வம்சேர்க் காது

அறுபத்து மூவரை ஆழ்வாரை எண்ணி

அறுபதில் ஓய்தல் நலம்.

 

சுறுசுறுப்பாய் ஓய்விலாது செல்வம்சேர்க் காது

கறுத்தவன் என்றும் வரலா மெனவே

அறுபதில் ஓய்தல் நலம்.

 

பேத்திமற் றும்பேரன் என்றே தினந்தினம்

மாத்திமாத் திப்போது போக்கிப் பிறகேநல்

சாத்திரம் கற்றோர்சொல் கேட்டேவுய் யும்வரை

காத்திருக் காதுன் சாவு.

 

கூவியழைத் தால்வருமோ

     இன்னும் பலகாலம்

ஆவியிருக் கட்டுமெனில்

     நிற்குமோ நம்முடல்

சாவிநிற்க சாய்ந்திடு

     மென்றே மனமுணர்ந்து

கோவில்செல் வோம்நம்

      மரணமெண் ணோம்நமது

நாவில்கொள் வோமவன் நாமம்.

 

எதிர்கால மென்னென் றறியோ மறுநாள்

புதிரா மெனஅறிவோ மென்றே தினமே

கதிரவன் முன்னீர் தருவோ மரங்கில்

சதிராடும் தில்லையுள் ளானை நினைவோம்

விதியது கொல்வதன் முன்.

 

நானூறு பாக்கள்

      தராதொரு பக்திரச

தேனூறு பாயாப்பு

      சார்ந்து வகுப்பது

பானூறு செய்தல்

    சிறப்பு.

 

 

ராலியின் வேண்டாத வெண்பா முயற்சி #24 :

அறஞ்செய எண்ணின்

    பெறும்பலர் தாக்கம்

அறமல்ல செய்யின்

    பெறும்பலர் ஊக்கம்

பிறர்வாழக் காணின்

    பெறுங்கொடும் நோக்கம்

பிறர்வீழக் காணின்

    பெறும்நல்ல தூக்கம்

மறவோம் கலியொரு

    சாக்கு.

 

ராலியின் வேண்டாத வெண்பா முயற்சி #25 :

மண்ணல்ல பொன்னல்ல பெண்ணல்ல செத்தபின்

விண்ணுலகு சேர்ப்பது விறகு.

 

BKR:

மரபு வழுவா தெழுதிடும் ராலி

விரலில் விளையாடும்வெண்பா

 

Rali:

ராலியின் வேண்டாத வெண்பா முயற்சி #26:

கிழங்கு துறந்து

      பசுங்காய் கறியும்

பழம்பாலு முண்ணச்சொல்

      லும்எந்தன் வைத்யா

முழநீளம் என்னுடைய

      நாக்கு.

 

ராலியின் வேண்டாத வெண்பா முயற்சி #27:

காளைபோல் நன்றாய்

      வளர்ந்தேன் பணம்தந்து

ஆளைக்கொண் டேவீட்டைக்

      கட்டினேன் நல்மனை

யாளை மறந்து

      மதிமயக்கும் கூர்க்கொடு

வாளைப்போல் கண்ணிரண்டும்

      மூங்கில்போ லும்வாழைத்

தோளை யுடைமா

      தரைக்கொஞ் சினேனெனது

மூளைகொண் டேவெல்ல

      எண்ணித் தவறாது

வேளைவி டாதுசேதி

      நன்கு தரும்செய்தித்

தாளைநம் பிச்சற்றும்

      எண்ண மறந்திட்டேன்

நாளையோ நாரணன்

      பாடு.

 

BKR:

விரல்நுனியில் வெண்பா இருக்க அதனை

விரயம் செயவேண்டாம் வீணே – சுரரமுதே

ஆயினு மின்பம் அளவோ டருந்துவதே

நீயுணராச் சொல்லோ இது?

 

கம்பன் கவித்திறமும் அள்ளக் குறையாது

உம்பர்கோன் கொண்ட நவநிதியும் – விம்முமிரு

திண்புயமும் கொண்டும் பயனென் குருநாதர்

பொன்னடிகள் போற்றாத பேர்க்கு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s