கற்றதனால் என் துயரும்
கடுகளவும் குறையவில்லை
பெற்றதனால் என் தாயும்
பெருமையுமே கொள்ளவில்லை என்
சிற்றறிவுக் கெட்டாத
சிவஞானம் தேடியிங்கு
உற்றதையும் உறவினையும்
ஒருசேரத் தவிர்த்து
நற்றவா! உன் மலரடியை
நான் வேண்டிக் கிடந்தேனே.
காக்கும் கடவுள்
கணேசன் இவனென்றே
நோக்கும் திசையெல்லாம்
நுண்ணுணர்வில் நானறிய
தாக்கும் வெவ்வினைகள்
தளர்ந்தே தாமகல எங்கும்
நீக்கமற நிறைந்தோனை
நினைவிறுத்தல் இக்காலம்!
வெந்ததைத் தின்று
வேகும் உடம்பினை
சொந்தமென எண்ணி
சுகவாழ்வு வாழ்ந்து
நொந்த என் மனதின்
நோய்தனை தீர்க்கும்
கந்தனவன் அருளால் நற்
கதி பெற்று உய்ந்திலனே.
Advertisements