Rali – Apr 29, 2016

ராலி க. நி. தெக்காலம்  #153

கடும் உழைப்புடன்

    காலமெல்லாம்

படும் துயரத்துடன்

    சேர்த்த பொருள்

இடும் வாழ்வில்

    உய்வென நம்பாமல்

நெடுமாலை ராலி

    நம்புவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #154

சில காலமே இப்பிறவி

    என்பது மறந்து

பல வழியில் பாவம்

    சேர்த்துப் புண்யமேதும்

இல என வீணே சாவார்

    போலிராது ராலி

உலகளந்தான் திருவடியை

    உணர்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #155

தாசனாய்க் கீழோரைப்

    பாடிப் புகழ்ந்து

நாசமாகும் பொன்னும்

    பொருளும் சேர்த்து

மோசம் போய்ப் பிறவி

    அழித்திராது ராலி

கேசவனைப் பாடி

    வணங்குவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s