Rali – Apr 25, 2016

ராலி க. நி. தெக்காலம்  #144

மந்த புத்தியும் அது தரும்

    மதி மயக்கமும் வெறும்

சொந்த பந்தமும் பொன்

    பொருள் வீடு வாசலும்

எந்த புண்யமும் சற்றும்

    சேர்க்காது என ராலி

வெந்த சாம்பல் பூசுவானை

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #145

ஆற்றல் கொண்டு அழியும்

    பொருள் சேர்த்து

ஏற்றம் ஏதுமிலாது மடமாந்தர்

    போல் வளர்ந்து

மாற்றம் தரும் மரணம் மறந்து

    வாழ்ந்திராது ராலி

கூற்றம் உதைத்த கூத்தனை

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #146

துக்கம் தரும் பொன்

    பொருட் குவியல் சேர்த்து

மக்கள் முன் மாமனிதன்

    போல் நன்றாய் நடித்து

சிக்க வைக்கும் பாவம்

    சேர்த்து வீணே மடியாது

முக்கண்ணனை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s