Rali – Apr 23, 2016

ராலி க. நி. தெக்காலம்  #141

ஏன் எதற்கென்றே கேட்டு

    சாத்திரச் சொல் கேளாது

தான் நினைப்பதொன்றே

    தான் சரியென இறுமாந்து

கூன் போட்டுக் குருடாகி

    வீணே சாகும் முன்னே ராலி

நான்முகனும் காணா நாதனை

    நண்ணுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #142

கரமிருந்தும் நல்சாத்திரச்

    செயல் ஏதும் செய்யாது

உரம் போட்டு வெற்றுடல்

    மரமாய் வளர்த்து ஒரு

தரம் இப்பிறவி வந்தது அரிது

    என மறந்து இராது

பிரமன் சிரமரிந்தானை

    ராலி சிந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #143

பேணுவது இவ் வெற்றுடல்

    பேசுவது வீண் பேச்சு

காணுவது ஒரு சிறு பயனுமிலா

    சிறு திரைக் காட்சி

தோணுவது வீண் எண்ணமென

    இராது பெண்ணோடு

ஆணுருவாய் நின்றானை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s