Rali – Apr 22, 2016

ராலி க. நி. தெக்காலம்  #138

வாசல் வீடு பொருளில்

    மனம் புதைத்து தினம்

ஊசல் ஆடுவது இவ்வுயிர்

    என்பது மறந்து அற்ப

ஈசல் போல் வீணே பிறந்

    திறந்து போகாது ராலி

கோசலேந்த்ர கோமகனைக்

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #139

 

ஊன்று தினம் பார்த்துப்

    படிக்கும் தினச்சேதிக்குச்

சான்று இன்றியும் அன்றே

    நம்பி நல் வேத நூலை

ஈன்று எடுத்தாள் போல்

    மதியாதார் போலிராது

மூன்று நயனத்தானை

    ராலி வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #140

விந்தையாம் இவ்வுலகில் பொருள்

    ஏறும் இறங்கும் பங்குச்

சந்தையில் மனம் பணம் குவித்தும்

    அழித்தும் இருக்கும்

மந்தை போன்ற மாந்தரை விட்டு

    விலகி ஒரு தாயுமிலா

தந்தையுமிலா வேந்தனை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s