Suresh – Apr 19, 2016

பத்துதலைப் பண்டிதனும் பாடியறியாத சிவம்

அத்துவித சங்கரனும் ஓதியுணராத சிவம்

முத்துவிளை கடற்குமரி கூடியிணையாத சிவம்

செத்துவிடு முன்பெனக்கு தீட்சை தருமோ சிவம்

 

பயந்து நின்னிரு பாதம்

பற்றிய பாலனும்

துணிந்து நின்மேல் பாசம்

சுற்றிய காலனும்

கனிந்து புண்மேல்தன்கண்

அப்பிய வேடனும்

நினைந்து கண்ட திருக்கோலம்

யான்காண்கிலனே

சந்திரரும் சூரியரும்

சங்கரமுனி மற்றவரும்

இந்திரரும் தேவர்களும்

இன்னபிற கின்னரரும்

எந்தையென ஏத்தியுனைப்

பாடிடவும் கண்டோம்

சிந்தையி லலாது நினைக்

கண்டவரும் உண்டோ

 

கண்டவருண்டு காணாது

பொய்யுரைத்த பூவினருண்டு

விண்டவருண்டு வீணாகக்

கதையளக்கும் பாவலருண்டு

உண்டவொரு குண்டோதரன்

செய்தசிறு சித்து

தொண்டரவர் கண்டுனது

திறமதில் வியந்தனரே

Author: Rali Panchanatham

Great Guy

Leave a comment