Suresh – Apr 17, 2016

தனையறி யாதே

தகவில பலசெய்

துனையறி யொண்ணா

துழன்று திரிந்தனம்

எனையொரு ஈசனும்

தனதரு ளாலே

வினையறுத் தாட்கொள

வருவதெந் நாளோ

தற்குறி யாதொரு

தர்க்கமும் அறிந்திலன்

உட்குறிப் பேதும்

உணர்ந்து கற்றிலன்

எப்பொருள் மெய்ப்பொருள்

தற்குறி உணர்ந்திட

நற்குரு நமசிவ

நாதன் அருள்கவே

சிறுகிளி விரலிடை

உமையவள் இடமுலை

பருகிய பாலகன்

தோடுடை செவிகண்டு

எருதிடை ஏறிய

எந்தையை ஏத்தியே

இருவரு மிரண்டிலை

யொன்றென உணர்த்தினன்

ஆடிய பாதமும்

ஆலமர ஞானமும்

தேடியே திரிபுரம்

எரித்தநின் வீரமும்

ஆடியின் வீதியில்முலை

மறைத்தநின் காதலும்

பாடியே ஏத்துமாறு

அறியேன் பராபரனே

மறைத்தனன் மறைத்த

பொருள் விளங்க உரையாமல்

உரைத்தனன் உரையில்

உறைந்த பூரணன்

முறைத்தனன் முக்கணால்

மும்மலம் அழியவே

மறைந்திட மரமும்

மாமத யானையும்

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s