ராலி க. நி. தெக்காலம் #132
எழுபது எண்பதாகியும்
நல்வேதம் கூறும்
பழுதிலா வழி துறந்து
வெறும் சுகம் தேடி
அழுகும் உடல் பேணிச்
சாகாது இமையோர்
தொழும் நம்பியை ராலி
தொழுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #133
வம்பளந்து ஊர்க்கதை
பேசி முதுநரை தட்டி
அம்பது வயதாயும் அரிது
இப்பிறவி என்பதை
நம்ப மறுத்து வீணே
சாவார் போலிராது ராலி
அம்பலத் தாடுவானை
அண்டுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #134
உடை நடையில் தன்
செல்வத்தைக் காட்டி
இடை இடையே கல்விச்
செருக்கும் காட்டி
கடைந்த மடையனாய்
வாழாது ராலி
விடையேறும் பரமனை
விரும்புவ தெக்காலம்?
Advertisements