Rali – Apr 18, 2016

@சுரேஷ்:

எங்கே ஒளிந்திருந்தது இது

          எல்லாம் இத்தனை நாளாய்?

அங்கே தாயுமானவர், இங்கே திருமூலர்,

          எல்லாம் நினைவில் வர

பங்குக்கு அருணகிரியும் வெளிப்பட

          சொல்லாய்ப் பொழிகிறாய்

தங்கு தடையின்றி உந்தன் கவிதை

          நில்லாது தினம் வரட்டும்

ராலி க. நி. தெக்காலம்  #129

வாரந் தோறும் பணத்தை

    எண்ணிப் பார்த்து

ஈரந் தோய்ந்த கையால்

    காக்கை ஓட்டாது

பேரம் பேசிப் பேயானார்

    போலிராது ராலி

வீரட்டான்னத் துறையானை

    விரும்புவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #130

எண்ண எண்ணக் குறையாத

    பொருள் சேர்க்கப் பாவம்

பண்ணப் பண்ணக் குறையாது

    பாவம் சேருவது மறந்து

வண்ண வண்ணத் திரைக்காட்சி

    கண்டு மடிவார் போலிராது

விண்ணவர் கோன் வேதியனை

    ராலி வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #131

விருந்து கூத்து விளையாட்டு

    என நாள் கழித்து தினம்

மருந்து உண்டு வாழும் ஈன

    நிலை வந்தும் சற்றேனும்

திருந்தும் வழி காணாது வீணே

    சாவார் போலிராது நஞ்சு

அருந்தும் நம்பி நீலகண்டனை

    ராலி நம்புவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s