Rali – Apr 15, 2016

ராலி க. நி. தெக்காலம்  #126

சற்றும் சாத்திரம் மதியாது

    நல் நால் வேத வழி

மற்றும் பெரியோர் சொல்லும்

    செயலும் மதியாது

வற்றும் ஆயுள் கழிந்து பாவியாய்

    மடியாது ராலி

சொற்றுணை வேதியனை

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #127

அடையாது விடுவதில்லை

    அற்பப் பொருளெனக்

கடையார் கீழோர் உறவு

    கொண்டு பெரும் பாவம்

உடையார் போல் வாழ்ந்து

    வீணே மடியாது ராலி

விடையானை விரும்பி

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #128

ஆறு தொழில் அந்தணனாய்ப்

    பிறந்தும் அறிவற்று

வேறு நினைவிலாது பொருளும்

    சுகமும் தேடித்

தாறு மாறாய் வாழ்ந்து வீணே

    சாவார் போலிராது

நீறு பூசும் நித்தியனை ராலி

    நினைப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s