Rali – Apr 12, 2016

ராலி க. நி. தெக்காலம்  #120

அங்கும் இங்கும் அற்பப்

    பொருள் தேடி அலைந்து

தங்கும் பொருளென மயங்கி

    மடிந்து தலைகீழாய்த்

தொங்கும் பாவியர் நிறை

    நரகு செல்வார் போலிராது

மங்கை பங்கினானை

    ராலி கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #121

சதியும் களவும் பொய்யும்

    செய்து அழியும்

நிதியும் நிலமும் சேர்த்துச்

    செய்யும் பழியும்

விதியும் சேர்ந்து வாழ்

    வழித்துக் கொல்லாது

நதியும் சூடினானை ராலி

    வாழ்த்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #122

இதமாம் நற்சொல் சொலாது

    பிறர் மனம் மிக

வதமாய்ச் செய்யும் சொல்

    பேசி அற்பப் பொருள்

சதமாம் என மயங்கி வீணே

    மடிவார் போலிராது

மதயானை உரித்தானை ராலி

    வணங்குவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s