Rali – Mar 31, 2016

ராலி க. நி. தெக்காலம்  #99

ஏத்தாதும் எண்ணாதும் உன்னைக்

    காணாதும் நறுமலர்

சாத்தாதும் நெடுங்கழி போல்

    உன்முன் வீழாதும் தலை

சாய்த்தாதும் இருந்தும் பொய்க்காது

    உன் கருணை என

பேய்த்தாய் முலையுண்ட கண்ணா

    ராலி வியப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #100

தங்க இடமும் உறங்கக்

    கட்டிலும் சற்றே அருகில்

வங்கக் கடலும் வயிற்றுக்கு

    நல் லுண்டியும் ஒவ்வொரு

திங்களும் நலமாய் வாழ

    நல்நிதியும் தந்தே காக்கும்

எங்கள் மாலிறைவனை ராலி

    எண்ணி ஏத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #101

வங்கக் கடல் தாண்டி

    வருந்தி உழைத்துத்

தங்கமும் தனமும்

    தேடிச் சேர்த்து வருடம்

திங்கள் வாரமென பிறவி

    வீணே முடித்திடாது

சிங்கப் பெருமானடி ராலி

    சிந்திப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s