Rali – Mar 21, 2016

ராலி க. நி. தெக்காலம்  #79

இமை கொட்டாது சிறுதிரை

    தரும் இன்பம்கண்டு பாபச்

சுமை சிறிதும் குறைக்காது

    ஏற்றி இனியொருமனிதப் பிறவி

அமையுமோ என்றொ ரெண்ணம்

    இன்றி வாழ்ந்திராது ராலி

இமையவன் மருக னீசனை

    இனிது அர்ச்சிப்ப தெக்காலம்?

 

 

ராலி க. நி. தெக்காலம்  #80

திருடன் போல் பொருள்

    திரட்டி அறவழியறியா

குருடன் போல் அற்பசுகம்

    மட்டும் தேடி அலைந்து

வருடந் தோறும் குறையும்

    ஆயுளை வீணே கழிக்காது

கருடன் தாங்கும் தலைவனை

    ராலி கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #81

கறை படிந்த உள்ளமும்

    பொருளை கவனமாய்ச்

சிறை செல்லாமல் சேர்க்குஞ்

    சிறுமதியும் தன் புகழ்

பறை அடிக்கும் வெறும்

    பகட்டும் இல்லாது ராலி

மறைக்காட்டுறை மைந்தனை

    வந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #82

பண்ணாத பாவமில்லை

    இப்பிறவியில் என

எண்ணாத தீவினை சேர்த்து

    நற்குணமழிக்க

உண்ணாத உண்டியில்லை

    என மிருகமாயிராது

அண்ணாமலை அரசனை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #83

ஊனை வளர்த்து உயிர்

    வளர்த்துப் பெரும்

பானை போல் வயிறு

    வளர்த்து உயர உச்சி

வானைத் தொடும் பாப

    மூட்டை வளர்க்காது ராலி

ஆனைக்கா அண்ணலை

    அர்ச்சிப்ப தெக்காலம்?

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s