Rali – Mar 19, 2016

ராலி க. நி. தெக்காலம்  #75

சரமாய்ப் பெய்து

    ஓய்ந்த மாமழை

மரம் சாய்த்து

    எல்லோர் இல்லமும்

தரம் பாராது புகுந்து

    நதியாயோடச் செய்த

அரவ மணிவானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

ராலி க. நி. தெக்காலம்  #76

பற்றாது தண்ணீரென

    வாடிய இம்மாந்தரின்

வற்றாத கர்மவினை

    மறந்து நீர்நிலையெலாம்

வற்றாதினியென மாமழை

    தந்து உணர்த்திய

குற்றாலத்துக் கூத்தனை ராலி

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #77

சேனை எல்லாம் திரண்டு

    வந்து தவிக்கும் மக்கள்

பானை பாய் உடைமை

    எல்லாம் விரைந்து காக்க

வானைப் பிளந்து மீண்டும்

    பெருமாரி வாராது காத்த

ஆனைக்கா வாழ் அண்ணலை

    ராலி அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #78

காணாதது கண்டாற் போல்

    பெய்தபெரும் பேய்மழை

பேணாதிருந்த ஏரிவழி யெல்லாம்

    உடைத்து எல்லாம்

வீணாய்ப் போக போதுமிதென

    நிறுத்திய பெண்ணோடு

ஆணாகிய பெம்மானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s