Rali – Oct 19, 2015

ராலி க. நி. தெக்காலம்  #21

தாமத மேதுமின்றி தினம்

     உண்டி உண்டு உறங்கி

காம க்ரோதமத மாத்சர்யம்

     கருத்தாய் வளர்த்து

சாமரமாய் விசிறி வீச ராலி

     இணையத்தில் வாழ்ந்திராது

ராமநாம சுகமுணர்ந்து

     நிஜமாய் பஜிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #22

வெட்டிப் பேச்சும் தர்மம்

     பேணாத செயலும் செய்து

பெட்டிப் பணம் சேர்த்து

     வீணாய்ப் பல்வகைப் பாவம்

குட்டி போட்டுக் கடலாய்ப்

     பெருக விடாது குண்டுச்

சட்டிப் பெருமாளை ராலி

     முறையே தர்சிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #23

தொடக்கத் திலிருந்தே

     துர்சங்கம் விரும்பி

கிடக்கட்டும் சாத்திரம்

     சத்சங்கம் என ராலி

எடக்காய் ஆன்றோர்

     மொழி துறக்காது

இடக்கால் தூக்கினானை

     துதிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s