ராலி க. நி. தெக்காலம் #71
உறுப்பு ஏதும் குறை
விலாது பிறந்தும் சாத்திர
வெறுப்பு கற்று சான்றோர்
வழி துறந்து தெய்வ
மறுப்பு ஒன்றே பேர்
அறிவு என மயங்கி இராது
கறுப்பு மேக வண்ணனை
ராலி கருதுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #72
என்தரம் கீழே தள்ளும்
துர்ஜனசங்கம் விரும்பி
நிரந்தரமிலா அற்பப் புகழ்
செல்வம் நாடி மனதுக்கு
உரந்தரும் நல்சாத்திர
வழி இகழ்ந்திராது ராலி
சுந்தர ரகுராமன் நல்சரித்
திரம் அறிவ தெக்காலம்?
Advertisements