SKC – Oct 12, 2015

உடைந்துவிடும் கூட்டினிலே

உயிர்வைத்த சுந்தரனை

நடைப்பிணமாய் நடமாடும்

நாயேனைப் படைத்தவனை

அடைகாக்கும் கோழியென

அரவணைக்கும் நாயகனை

சடைவிரித்த ஈசனையே

சரணடைவ தெக்காலம்?

 

தென்புலத்தார் திசை நோக்கி

தினந்தோறும் துதி செய்து

பின்னர் வரும் சந்ததியும்

பிறவிப் பயன் பெற்றிங்கு

நன்மைகளும் நாடிடவே

நாள்தோறும் புலனடக்கி பின்

அன்னையவள் கொலுவினிலே

அகமகிழ்வ திக்காலம்!

 

இம்மானுடப் பிறப்பும்

ஏழாம் மறுபிறப்பும்

எம்மால் இயலாமல்

என்குருவை சரணடைய

சும்மாயிரு என்ற

சுவாமியென் ரமணரை

எம்மான் என உணர்ந்து

எமை ஈதல் எக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s