ராலி க. நி. தெக்காலம் #5
தேவை தேவை என்றே
வாழ்ந்திருக்காமல் ராலி
யாவையும் வேண்டு
மென் றிச்சிக்காமல்
சாவை ஒரு நாள் ஒரு
போதும் மறக்காமல்
பாவை மருவும் பரமனைப்
பணிவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #6
அலைபேசியைத் தடவித்
தடவி வீணே இணைய
வலைகளில் ராலி விலா
வரியாய்ப் பேசிப் பேசி
தலை முதல் கால் வரை
நோய் சேரும் முன்னே
மலைமகள் மனமகிழ்
மன்னனைப் பணிவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #7
வேடிக்கையாய் ராலி
காலம் கழித்து
கேளிக்கை தான்
கதியென வாழ்ந்து
வாடிக்கையாகவே
செயல் செய்திராமல்
வாலிக்கும் வரம் தந்தானை
வணங்குவ தெக்காலம்?
Advertisements