Rali – Oct 05, 2015

ராலி கவிதையை நிறுத்துவ தெக்காலம்  #1

நெஞ்சம் கலக்கும்

வஞ்சகச் செய்திகளும்

பஞ்சு போல் நிலை

யிலா ஊடகங்களும்

கொஞ்சம் கொஞ்ச

மாய் ராலி தவிர்த்து

அஞ்சு கரத்தானைத்

தஞ்சமடைவ தெக்காலம்?

 

ராலி கவிதையை நிறுத்துவ தெக்காலம்  #2

வந்திருக்கும் கார்யத்தைச்

சற்றும் மறக்காமல்

தந்திருக்கும் பிறப்பை

வீணே கழிக்காமல்

பன்னிரெண்டு மாதமும்

பழங்கதையாய்ப் போகாமல்

பன்னிரெண்டு கரத்தானை

ராலி நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #3

உண்டதுவும் உறங்குவதும்

மாறி மாறிக்

கண்டதுவும் கனவில்

மீண்டும் வந்ததுவும்

மந்தமாய் மதிமயக்கும்

கதி தவிர்த்து ராலி

அண்டர்கோன் அரங்கனை

அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #4

ஓயாத எண்ண அலையில்

மாட்டித் தவிக்காமல்

தேயாத ஆசைக் குவியலில்

அழுந்திக் கிடக்காமல்

காயாத மனப்புண்ணை

யெண்ணி மாளாமல் ராலி

தாயாகவுமான அரனை

எண்ணித் தவிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s